11.13.2009

என் மனம்!














இதைப் பார்த்த அடுத்த கனம்

என் மனம் பதபதைக்கிறது !

துடி துடிக்கிறது !

வலிக்கிறது!


நீங்கள் கேட்கலாம் இப்போது தான் தெரிகிறதா என்று?

ஆம்! இப்போது தான் புரிகிறது

ஏன் கடவுள் என்னை இப்படிச் செதுக்கினான் என்று

எளிமையானவனாக !

இரக்கம கொண்டவனாக!

வறுமையின் நிறம் தெரிந்தவனாக!

நேர்மையாளனாக!

குறை வயிறு உண்பவனாக!

பஞ்சு மெத்தை விரும்பாதவனாக !

அருவருப்பு விரும்புவனாக!

ஆடை அலங்கரிக்கத் தெரியாதவனாக!

கவர்ச்சி இல்லாதவனாக!


(கடவுளே) சொல்லாமல் சொல்கின்றாயோ!

காரண காரியமாகத் தான் - உன்னைப்

படைத்தேன் என்று!

காரணம் புரிந்தது !

காரியம் தெரிந்து கொள்ள விழைகின்றேன்!


கடவுள் நண்பனே!

நன்றி சொல்ல விரும்புவதில்லை

என் நண்பர்கட்கு -ஆனாலும்

நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன் உனக்கு !

No comments:

Post a Comment