அன்றைய தலைப்பு "நீரும் அதன் அவசியமும்" .அதைப் பார்க்க முதல் காரணம் அதில் பங்கேற்று பேசிய அந்த சிறப்பு அழைப்பாளர் ஒரு தமிழர், அவர் பெயர் திரு சீதாராம். .அது மட்டும் இன்றி நான் மிகவும் விரும்பும் ஊரான கள்ளிடைக்குறிச்சி தான் அவரது பிரத ஊரும்.

http://www.spp.nus.edu.sg/Faculty_K_E_Seetharam.aspx
இரண்டாவது காரணம் நான் மிகவும் நேசிக்கக் கூடிய "தண்ணீர்" பற்றியதானது அன்றைய தலைப்பு.
நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பித்தது முதல் முடியும் தருவாய் வரை , உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் முழுவதையும் பார்த்து முடித்தேன். இடையிடையே அந்த நிகழ்ச்சிக்கு அழைத்து என்னுடைய சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள முனைந்தேன்.என் போதாத நேரம் இணைப்பு கிடைக்கவில்லை.
ஆக எப்படியாவது அந்த சிறப்பு அழைப்பாளரிடம் எனது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு வலைத்தளத்தில் தேடி அவரது மின்னஞ்சல் முகவரியையும் பெற்று, அவருக்கு எனக்குள்ளே எழுந்த சில சந்தேகங்களை அவருக்கு அனுப்பி அதன் விடை தெரிய காத்துக் கொண்டிருக்கிறேன்..
இதோ அந்த மின்னஞ்சல்:
Dear Sir,
வசந்தம் தொலைக்காட்சியில் தாங்கள் பங்கு பெற்று , நேற்று நேரடியாக ஒளிபரப்பான "அரங்கத்தில் இன்று "நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தேன்.தங்களது கருத்துக்கள் ஒவ்வொன்றும் அற்புதம்.
நேற்றைய நிகழ்ச்சியில் தங்களைத் தொடர்பு கொள்ளத் தோற்றுப்போய் , வலைதளத்திலே தங்களைப் பற்றியும் ,தங்களது மின்னஞ்சல் முகவரியையும் தெரிந்து கொண்டேன்.இப்படி ஒரு அருமையான நிகழ்ச்சியைத் தந்த உங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகளும்,வாழ்த்துக்களும்.
எனக்கு நீர் மற்றும் மரங்கள் என்றால் ஒரு இனம் புரியாத பிரியம். இவற்றின் மீதான விழிப்புணர்வு என்பது தானாக ஏற்பட்டது என்பதை விட ,தங்களைப் போன்ற வல்லுனர்கள் மற்றும் ஆர்வலர்களின் நிகழ்ச்சிகள்,செய்திகள் மற்றும் கட்டுரைகளைப் படித்து அதனால் ஏற்பட்டது என்றால் அது மிகையல்ல.
ஒரு இந்தியர் குறிப்பாக தமிழர் இத்தனை உயரங்களை எட்டியிருப்பதில் பெருமையிலும் பெருமை.
இந்த சிங்கப்பூரில் எனக்கு மிகவும் பிடித்தது என்றால் அது இங்குள்ள மரங்களும் , நீரும் தான். அதற்கு சிறப்பு சேர்த்தாற்போல் தங்களது நேற்றைய நிகழ்ச்சி அமைந்தது.நீங்கள் நேற்று சொன்னது போல் இங்குள்ள அரசியல் தலைவர்கள் நீரின் முக்கியத்தவத்தை நன்றாக உணர்ந்திருந்ததால் தான் எதிர்காலத்திற்கு பயன் தரக்கூடிய அனைத்துத் திட்டங்களையும் முயற்சிகளையும் மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.
பணத்தைக்கு கூட அதிகம் யோசிக்காது செலவழிக்கும் பழக்கமுடைய நான் ,உபயோகப்படுத்தும் ஒவ்வொரு துளி நீரையும் ,பயனுள்ளதாக்க விரும்பி அப்படியே கடைப்பிடித்தும் வருகிறேன். நான் வசிக்கும் விடுதியில் கூட , குளிக்கும்போதும் அல்லது கழிவறையைப் பயன்படுத்தும் போதும் ,நீரின் மகத்துவத்தை அறிந்து என் நண்பர்கட்கும் என்னைச் சுற்றி உள்ளவர்கட்கும் எடுத்துக் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளவன்.சில நேரங்களில் ஏளனமாகப் பேசியோரும், பேசுவோரும் உண்டு.அதைப்பற்றி துளி கூட வருந்தியது கிடையாது.அது என்னுள்ளே ஊறிப் போன ஒன்று.
என்னை வாட்டிக் கொண்டிருக்கும் சில கேள்விகளுக்கு விடையறியவே இந்த மின்னஞ்சல். அது தான் நம் இந்தியத் திருநாட்டின் நீர் வளம், அதன் பயன்பாடுகள் ,கையாளப்படும் விதம் மற்றும் அதற்கான கொள்கைகள். எனக்குத் தெரிந்தவரை அப்படி ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. சிங்கப்பூரிலே நான் நீரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு கணமும் என் மனம் வலிக்கும். இப்படியான நிலை நம் நாட்டிலே எப்போது வரும் என்கிற ஒரு ஆதங்கம் மட்டுமல்ல அதற்கான முயற்சியில் எனது பங்களிப்பு என்பது எவ்வளவாக இருக்கப் போகிறது என்கிற நினைப்பு மற்றும் கவலை.
இங்கே எதிர்காலத்தை , எதிர்காலச் சந்ததியைப் பற்றிச் சிந்திக்க நல்ல அரசியல் தலைவர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்.நம் நாட்டிலும் இருக்கிறார்கள் ,இல்லை என்று சொல்லவில்லை .ஆனாலும் நம் நாட்டில் அரசியலாளர்களும், அதிகாரிகளும் செய்த வைத்திருக்கின்ற நிலையைப் பார்த்தால் அழுகையும் சேர்ந்தே கூட வருகிறது.
நம் முன்னாள் பாரதக் குடியரசுத் தலைவர் Dr.அப்துல் கலாம் அவர்கள் கூட, நாம் எப்போது தண்ணீரில் தன்னிறைவு அடைகிறோமோ, சுத்தமான நீர் அனைவருக்கும் கிடைக்கிறதோ அன்று தான் நாட்டின் வளர்ச்சி என்பது மக்கள் சார்ந்த வளர்ச்சியாக அமையும் என்று சொல்லி இருக்கிறார். அந்த நிலை எப்போது வரும்?
உங்களுக்கான எனது கேள்விகள்:
1. இன்போசிஸ் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான திரு.நிலேங்கனி(Nilenkani) அவர்கள் தான் வகித்த பதவியைக் கூட விட்டுவிட்டு நம் பாரத்திற்கு பயன் தரக்கூடிய முக்கியமான "Unique Identitty Authority of India" திட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு முழுமையாக உழைத்து வருகிறார். அப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் இந்தியாவுக்கென்று நீர்க்கொள்கையை உங்களால் உருவாக்க முடியுமா அதற்கு நீங்கள் தயாரா?
2. இப்போதுள்ள நிலையில் நம் பாரதத்திற்கு நீரில் தன்னிறைவடைய என்ன தேவை? சரியான அரசியல் தலைமையா அல்லது மக்களின் அணுகுமுறையில் மாற்றமா?
3. இன்றைய சூழலில் இந்தியாவுக்கான தங்களது பங்களிப்பு என்ன?
4. தற்போது சிங்கப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றேன்.வாய்ப்புக் கிடைத்தால் தங்கள் வழிகாட்டுதலின் கீழ் இது சம்பந்தமான அறிவைப் பெற ஆர்வமாக இருக்கிறேன்.அதாவது உங்கள் மாணவனாகவும் தயார். வாய்ப்பு கிட்டுமா?
தங்களின் வழிகாட்டுதல் நம் பாரதத்திற்கும் எங்களைப் போன்றோருக்கும் மிக முக்கியமான தேவை.
Sir, Please apologise me if anything wrong in my above said things and for sending this e-mail to your official e-mail ID.
Yours Sincerely
Muralikrishnan T
+65-81085064
ஆகா ! என்ன ஆச்சர்யம் ! நான் மின்னஞ்சல் அனுப்பிய மறு தினமே அவரிடமிருந்து பதில். கூடியவிரைவில் அவரைச் சந்திக்க அனுமதி தருவதாக அதில் கூறி இருந்தார். அவரிடம் இருந்து இவ்வளவு விரைவில் பதில் வரும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை..
இதோ அவரது பதில்!
Dear Mr. murali
Thank you for the kind words, and this email and your nice questions. My email does not allow typing in Tamil, hence this brief reply. Certainly, I will arrange an opportunity for us to meet (and talk in Tamil).
Regards,
Prof Seetharam Kallidaikurichi
Director, Institute of Water Policy, Lee Kuan Yew School of Public Policy
Director, Global Asia Institute, National University of Singapore

























