5.11.2012

என்னவள்

கொழு கொழு குந்தாணி
கோடை (விடுமறை) கழிக்க 
வந்தவளே !
உன் கோடை என்னாச்சு      
குளிராகி   மாறிப்போச்சு     -உன்னை 
கண்  பார்த்த  பின்னே! 

பால்  கொண்டு  வந்த  என்னை 
பால்   வண்ண  உன்  முகம்  காட்டி 
நெஞ்சை                                                                                                                 
பாலாக்கி  விட்டாயடி  – அது 
பழுதாகியும்  போனதடி  .

பால்  பருவ 
வயதினிலே  
உன்  மனசு  கலைக்க  அஞ்சி 
பொழுது  காத்து 
கிடந்தேனடி  
என்  மனசை  சொல்லத்தானே !

பொழுது  மட்டும்  புலர்ந்ததடி 
உன்  மனசு  மட்டும்  திறக்கவில்லை!  



நீ  யாரென்று  கேட்ட  போது
உனைக்  கண்டதில்லை  என
சொன்னபோது 
 உன்  மடி  தேடிய  என்  மனசு
பாய் மடி  கிடைத்த 
வருத்ததிலே 
விம்மிக்  கிடந்ததடி 
விழி நீரால்  நனைந்ததடி


சும்மா  தான்   விடுவேனோ 
உன்  கை  பற்ற 
உன்னைக்  கைப்பற்ற 
வேறு  வழி   தேடினேனே !
வழி   ஏதும்  கிடைக்கலையே 
விழி  மட்டும்  தேடியதே .

உன்னை  தான்  பெண்  கேட்க 
நானறியா   துணிச்சல்  மட்டும்
எங்கிருந்தோ   வந்ததடி 
உன்  தாய்  முன்னே  நின்றேனடி .

உன்னை  போல  உன்  தாயும் 
(எனை ) யாரென்று  கேட்காம 
உன்  சோடி  இவ  இல்ல 
நல்ல  சோடி  கிடைக்குமுன்னு 
சொல்லி  சொல்லிப்  பத்த்தாங்க 
சொன்ன  பேச்சு  கேக்காம !

எப்படியோ  கெஞ்சி  கெஞ்சி
சம்மதமும்  வாங்கினேனே 
நெஞ்சுக்குள்ள  உன்னை  சேர்க்க !

ஆறு  காலம்  ஓடிப்  போச்சு - ஆனால் 
ஆசை  மட்டும்  குறையலையே 
நேசம்  தான்  கூடுதடி

No comments:

Post a Comment